;
Athirady Tamil News

66 பேரை பலிகொண்ட விமானம் கண்டுபிடிப்பு..!!

0

ஈரானில் 66 பேருடன் மலையில் மோதி விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரானில் கடந்த 18ம் திகதி 66 பேருடன் புறப்பட்ட ATR 72-500 என்ற விமானம் ஜாக்ரோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

பயணம் செய்த அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் விமானத்தை தேனா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகொப்டர் கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் மூலம் விமானம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தோன்.

ஆய்வுகளின் அடிப்படையில் இரு ராணுவ ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டன.

அங்கேயே தங்கியிருந்த மீட்புக்குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட 500 படங்களின் உதவியுடன் விமானம் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 2 =

*