;
Athirady Tamil News

பிரித்தானியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி காரணங்கள்…!!

0

பிரித்தானியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் சிறிய நாடுகளான Cuba, Latvia மற்றும் Belarusஐ விட அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் சுமார் 3 குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்துபோகின்றன.

இந்த எண்ணிக்கை Cuba, Latvia மற்றும் Belarus போன்ற நாடுகளை விட அதிகமாகும்.

தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உடல் பருமன் மற்றும் பெண்கள் காலம் தாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதுமே இதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாய்மார்களின் வாழ்க்கைமுறை மற்றும் மருத்துவ வசதிக்குறைபாடுகள் உட்பட பல விடயங்கள் இதற்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பருமனான மற்றும் அதிக வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிரசவத்தின் போது பல பிரச்சினைகளை சந்திக்கின்றன, அதுபோல் இத்தகையோருக்கு குறை பிரசவங்களும் அதிகம் நிகழ்கின்றன.

அதுமட்டுமின்றி இரட்டைக் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறக்கும் மூன்று குழந்தைகள், செயற்கைக் கருவுறுதல் மூலம் பிறக்கும் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் பிரசவத்தின்போதும் பிரசவத்திற்குப் பின் குறுகிய காலத்திலும் இறக்கின்றன.

பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காததால் எளிதில் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.

பிரித்தானியாவில் குழந்தைகள் இறப்பதற்கான இன்னொரு முக்கியக் காரணம், குழந்தைகளை கவனிக்கும் அலுவலர்கள், பிரித்தானியாவில் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக விளங்கும் sepsis மற்றும் pneumonia என்னும் இரு நோய்களை கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தாமதிப்பதுதான் என்னும் அதிர்ச்சித்தகவல் ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறிய நாடுகளில் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்க முன்னேறிய பிரித்தானியாவின் பல மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் குறைவான அலுவலர்களுடனும் மோசமான நிலையிலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eight =

*