;
Athirady Tamil News

பிரான்சில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பழம் இதுதான்: வெளியான தகவல்..!!

0

பிரான்சின் பெருவணிக வளாகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பழக்கங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் நச்சுத்தன்மையுடன் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிரான்சில் பெரும்பாலான வணிக வளாகங்களில் விற்பனைக்கு வைக்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நமது ஆரோக்கியத்துக்கு சவால் விடுபவை தான்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், பிரான்ஸ் மக்கள் அதிகமாக நுகரும் பொருட்கள் பெரும்பாலானவை நச்சுத்தன்மை கொண்டதாக இருப்பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் பிரான்சில் பொதுமக்களின் நுகர்வுக்கு வைக்கப்படும் ஆர்கானிக் அல்லாத 52 வகை பழ வகைகளில் அதிக அளவு நச்சுத்தன்மை இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 73 விழுக்காடு பழங்களில் அதிக அளவு நச்சுத்தன்மை இருப்பதாகவும், 41 விழுக்காடு காய்கறி வகைகளில் நச்சுத்தன்மை இருந்ததையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

பிரான்ஸ் மக்களால் பெருமளவு கொள்முதல் செய்யப்படும் பழ வகைகளில் திராட்ச்சையில் 89 விழுக்காடு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது என அதிர்ச்சி தகவலை குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நச்சுத்தன்மை மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்:

Tangerines – 88.4%

Cherries – 87.7%

Strawberries – 83%

Plums – 34.8%

Kiwis – 27.1%

Avocados – 23.1%

Celery – 85%

Fresh herbs – 75%

Chicory – 73%

Celeriac – 72%

Lettuce – 66%

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + eight =

*