;
Athirady Tamil News

பஞ்சாபில் விஷவாயு கசிந்து 4 பேர் பலி…!!

0

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் உணவுப் பதப்படுத்தும் தனியார் ஆலை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அமோனியா வாயு சிலிண்டர்களில் ஒன்று வெடித்தது. இந்த சப்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஆலைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 4 பேர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்து உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆலைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*