;
Athirady Tamil News

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

0

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்பட வில்லை என்றால் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சாரதிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த சம்பவத்தை முன்னிறுத்தி தற்போது கொழும்பில் இருந்து திருகோணமலை வரையில் பயணிக்கும் தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தெடங்கொட தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு, திருகோணமலை பாலையூற்று பகுதியில் வைத்து பெண்ணொருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அதனை அடுத்து குறித்த தொடருந்தின் மீது அந்த பெண்ணின் உறவினர்கள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனால் அந்த தொடரூந்தின் இயந்திரத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டது.

இதனைத் தொடருந்து மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு குறித்த அஞ்சல் தொடருந்து கொழும்பை வந்தடைந்தது.

இந்த சம்பவம் காரணமாக குறித்த அஞ்சல் தொடரூந்து 2 மணித்தியாலங்கள் தாமதித்தே கொழும்பை வந்தடைந்ததாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண் குடும்ப பிரச்சினை காரணமாகவே தொடரூந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனவும், அவருக்கு 21 வயது எனவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − thirteen =

*