;
Athirady Tamil News

மட்டக்களப்பில் கத்திக்குத்திற்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில்..!!

0

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகறாறு வலுவடைந்து இறுதியில் கத்திக்குத்தில் நிறைவடைந்துள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + fourteen =

*