;
Athirady Tamil News

அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்துகொள்ள இந்த நல்லிணக்க அலைவரிசை உதவும்…!!

0

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க அலைவரிசை பாரியளவில் வலுசேர்க்கும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நல்லிணக்க அலைவரிசை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில் ,

அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்துகொள்ள இந்த அலைவரிசை உதவும் .

நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள தமிழ் – சிங்கள – முஸ்லிம் – மலே – பர்கர் உள்ளிட்ட சகல தரப்புக்களும் இணைந்து செயற்பட்டார்கள். சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட இன – குல முரண்பாடுகளினால் யுத்தத்திற்கும், இரண்டு புரட்சிகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் கூறினார்.

2015ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்ரிபால சிறிசேன நாட்டை புதிய திசைக்கு எடுத்துச் சென்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கடந்த காலப்பகுதிகளில் 17 தடவைகள் வட பகுதிக்கு சென்றுள்ளதோடு, பிரதமர் ஒன்பது சந்தர்ப்பங்களில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − one =

*