;
Athirady Tamil News

கழிப்பறை இல்லாத வீட்டில் 4 பிள்ளைகளை அடைத்து வைத்த பெற்றோர்: நேர்ந்த அவலம்…!!

0

அமெரிக்காவில் 4 பிள்ளைகளை அவர்களின் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் உள்ள படுக்கையறையில் உணவு மற்றும் கழிப்பறை வசதியில்லாமல் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனா மாகாணத்தில் உள்ள டுக்சன் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பெனிடோ (69) மற்றும் கரோல் குடிரீஸ் (64) தம்பதி 6லிருந்து 12 வயதுடைய 4 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் நால்வரையும் ஒரு வீட்டில் உள்ள தனித்தனி படுக்கையறையில் பெனிடோவும், கரோலும் அடைத்து வைத்துள்ளனர்.

உணவு, விளக்கு வெளிச்சம், கழிப்பறை போன்ற அடிப்படை விடயங்கள் எதுவும் நால்வருக்கும் செய்து தரப்படவில்லை.

இதையடுத்து நால்வரில் ஒருவர் அங்கிருந்த பக்கெட்டை கழிப்பறையாக உபயோகப்படுத்தியுள்ளார்,

இப்படி ஒரு நாளைக்கு 12 மணிநேரம் அவர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நால்வரில் ஒரு சிறுவன் அறை ஜன்னல் வழியே தப்பி அருகிலிருக்கும் கடைக்கு சென்றுள்ளான்.

அங்கிருந்த நபர் மூலம் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த விடயங்கள் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நான்கு பேரையும் மீட்ட நிலையில் பெனிடோ மற்றும் கரோலை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − six =

*