;
Athirady Tamil News

2018 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கவனத்திற்கு…!!

0

கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும் , தனியார் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் இதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது. குறித்த திகதியின் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் , எந்தவித காரணங்கள் கொண்டும் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*