;
Athirady Tamil News

நல்லாட்சி இலக்கை அடையும் வகையில் சகல பணிகளும் முன்னெடுக்கப்படும்…!!

0

நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் காரணமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இன்னும் சில தினங்களில் வழமை நிலைமைக்கு திரும்பிவிடும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலையடுத்து தேசிய அரசாங்கம் தொடர்பில் பத்திரிக்கையிலேயே பல்வேறு ஊகங்களுடனான செய்திகள் வெளிவந்தன. சில விடயங்களில் உண்மைக்கு மாறான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகின. இவை உண்மைக்கு மாறானவை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. சமகால நல்லாட்சி அரசாங்கம் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

நல்லாட்சி இலக்கை அடையும் வகையில் சகல பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச்செலவு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இதில் கூடிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரவிநியோகம் இடம்பெறவில்லை .

உரமானிய நிதி வழங்கப்பட்டது. இதற்கு தீர்வாக வவுச்சர் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தாம் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உரத்திற்கான மானியம் பணமாக வழங்கப்படுவதனால் அது உரியவகையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு இதற்கு மாற்றுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உலக சந்ததையில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடையும் பொழுது அதன் பயன்களை நாம் மக்களுக்கு வழங்கினோம். சமையல் எரிவாயுவின் விலையை 1300 ரூபாவினால் குறைத்தோம் . முன்னைய அரசாங்க காலப்பகுதியில் இவ்வாறானவை இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தேங்காய் விலைகுறித்து குறிப்பிடுகையில் கடும்வறட்சியின் காரணமாக தெங்குமரங்களின் அறுவடை வீழ்ச்சியடைந்தது.

வெளிநாடுகளிலிருந்து தேங்காயை இறக்குமதிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தேங்காய் அறுவடையில் வீழ்ச்சிகண்டிருந்தன. அந்த நாடுகள் எம்மிடம் தேங்காய் இறக்குமதியை எதிர்பார்த்தன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலையை பல்வேறு சந்தர்ப்பங்களின் குறைத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலில் 13 அத்தியாவசியப்பொருட்கள் பின்னர் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.இதேபோன்று வரவுசெலவுத்திட்டத்திற்கு முன்னரும் பின்னரும் 8 அத்தியாவசியபொருட்களின் விலைகளைக் குறைத்தது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*