;
Athirady Tamil News

தென்னாப்பிரிக்காவில் காவல் நிலையம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு – 5 போலீசார் பலி..!!

0

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுக்கோபோ நகரில் உள்ள காவல் நிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கிருந்த ஒரு போலீஸ் வாகனத்தில் அள்ளிப்போட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் விஷ்ணு நாயுடு தெரிவித்துள்ளார்.=

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 20 =

*