;
Athirady Tamil News

விவசாயிக்கு வேறு ஒருவரின் கையை பொருத்தி டாக்டர்கள் சாதனை..!!

0

திண்டுக்கலை சேர்ந்தவர் நாராயணசாமி (45) விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு மின்சாரம் தாக்கியதில் இவரது 2 கைகளும் செயல் இழந்தது.

இந்த நிலையில் மணலியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபர் சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்பு நாராயணசாமிக்கு பொருத்த ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 7-ந்தேதி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஒட்டு உறுப்பு சிகிச்சை பேராசிரியர் பிரமாதேவி தலைமையில் நாராயணசாமிக்கு வெங்கடேசனின் கைகளை பொருத்தும் ஆப்ரே‌ஷன் நடந்தது. இதில் 75 டாக்டர்கள் பங்கேற்று 13 மணி நேரம் ஆப்ரேசன் செய்தனர்.

தற்போது நாராயணசாமி நலமாக உள்ளார். அவரது 2 கைகளும் நல்ல முறையில் செயல்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் இந்தியாவில் முதல் முறையாக இந்த ஒட்டு உறுப்பு மாற்று சிகிச்சை நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த டாக்டர்களுக்கும், உடல் உறுப்பு தானம் செய்த வெங்கடேசனின் உறவினர்களுக்கும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்களில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து அனைவரையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*