;
Athirady Tamil News

திருவெண்ணைநல்லூர் அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

0

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தக்கா கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது60) விவசாயி.

இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்க்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது உறவினர்கள் முருகனை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது அவர் வி‌ஷம் குடித்து வாயில் நுரைய தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் .

அங்கு முருகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமால் முருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் வயிற்று வலியினால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − ten =

*