;
Athirady Tamil News

உலகிலேயே முதன்முறையாக தன் குழந்தைக்கு பாலூட்டிய திருநங்கை..!!

0

உலகிலேயே முதன்முறையாக தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார் திருநங்கை ஒருவர்.

30 வயதான திருநங்கையின் பெயர் குறிப்பிடவில்லை, இவர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Mount Sinai Centre-ல் பணிபுரியும் Tamar Reisman மற்றும் Zil Goldstein என்ற மருத்துவர்களை அணுகியுள்ளார்.

அப்போது தன்னுடைய துணை கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் பாலூட்ட அவருக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.அதனால் குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் ஊட்ட தனக்க விருப்பமுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹார்மோன் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சைகள் (Breast Augmentation, Orchiectomy or Vaginoplasty) மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவர்களின் இந்த முயற்சி வெற்றி கண்டுள்ளதாக Transgender Health நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகின் முதல் திருநங்கையாக பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு வாரங்கள் பாலூட்ட முடியும்.

குறிப்பாக கனடாவிலிருந்து பெறப்படும் Domperidone என்ற மருந்தை தினமும் மூன்று முறை 10 மில்லிகிராம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆறு மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் வழங்க முடியுமாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 6 =

*