;
Athirady Tamil News

ஆவியை மணந்து கொண்ட பெண் கர்ப்பமா?..!!

0

ஆவியை திருமணம் செய்து கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த Amanda Teague என்னும் 45 வயதுப்பெண் கர்ப்பமுற்றிருக்கலாம் என மருத்துவர் கூறியதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற Amanda Teague என்னும் பெண் தான் ஜாக் என்னும் ஆவியைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.அந்த ஆவி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கடற்கொள்ளையனின் ஆவியாம்.

முறைப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விரும்பாத Amanda Teague, திருமணம் சட்டப்பூர்வமானதாக இருப்பதற்காக சர்வதேச கடற்பகுதியில் தனது திருமணத்தை நடத்தினார்.

மணமகனுக்கு மோதிரம் அணிவிக்க முடியாது என்பதால் மணமகன் சார்பாக ஒரு மெழுகுவர்த்திக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தான் ஜாக்குடன் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை மேற்கொள்வதாகவும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் Amanda Teague தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டு அதிர்ச்சியடைந்தவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அவரது அறிகுறிகளை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறியதும் அதிர்ச்சியடைந்த Amanda ஜாக்கிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

ஜாக்கோ தான் ஆவி என்பதால் குழந்தைக்கு தந்தையாக முடியாது என கூற, தொடர் பரிசோதனைகளின் மூலம் இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. 45 வயதாகி விட்டதால் Amandaவுக்கு மெனோபாஸ் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தானாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − four =

*