;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பெற்ற பிள்ளைகள் மீது சுத்தியலால் கொடூர தாக்குதல் நடத்திய தந்தை: அதிர்ச்சி காரணம்..!!

0

பிரித்தானியாவில் தனது 4 பிள்ளைகளை சுத்தியலால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெற்ற பிள்ளைகளை கொடூரமாக சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த 29 வயது ஓவன் ஸ்காட் என்ற நபர், பின்னர் தனது வாகனத்தில் 4 பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு மதுபான விடுதியின் சுவற்றில் மோதவிட்டு விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஓவன் ஸ்காட் 14 ஆண்டுகள் சிறையில் இருப்பார் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று மதுபோதையுடன் போதை மருந்தும் எடுத்துக் கொண்ட ஓவன் ஸ்காட், தமது 3 பிள்ளைகள் மற்றும் வளர்ப்பு மகள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

அவரது 7 வயது மகளுக்கு அந்த தாக்குதலில் மண்டை ஓட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளதாகவும், எஞ்சிய காலம் குறித்த சிறுமி சக்கர நாற்காலியில் மட்டுமே காலம் தள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்டின் 21 மாத மகன், 9 மாத குழந்தை மற்றும் 8 வயது வளர்ப்பு மகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மதுபான விடுதியில் மோதிய ஸ்காட்டின் வாகனத்தில் இருந்து ரத்தக்கறை புரண்ட சுத்தியல் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

பின்னர் வாகனத்தினுள் குற்றுயிராக கிடந்த குழந்தைகள் அனைவரையும் மீட்ட பொலிசார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் கடந்த மாதம் ஓவன் ஸ்காட் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் Sheffield Crown நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக பொலிசார் ஸ்காட் மீது வாகன விபத்து தொடர்பான வழக்கையே பதிவு செய்துள்ளனர். பின்னரே கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*