;
Athirady Tamil News

ரயில்வே டிராக்கில் தவறி விழுந்த குழந்தை: ஹீரோவான இளைஞர்..!! (வீடியோ)

0

இத்தாலியின் மிலன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரயிலுக்காக தனது தாயுடன் காத்திருந்த 2 வயது சிறுவன், விளையாட்டு எண்ணத்தில் ரயில்வே டிராக் அருகே ஓடிச்செல்கிறான்.

தவறுதலாக கீழே விழுந்ததும் பதறிப்போன தாய், செய்வதறியாது கத்துகிறார்.உடனடியாக அங்கே வந்த 18 வயது இளைஞர், சிறிதும் யோசிக்காமல் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளார்.

இக்காட்சிகளை கண்ட நிலைய மேலாளர் ரயில் போக்குவரத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்கும், நிலைய மேலாளருக்கும் பாராட்டுகள் குவிகின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*