;
Athirady Tamil News

பேருந்துக்காக பிச்சை எடுத்த நபரிடம் கத்தை கத்தையாக பணம்: அதிர்ச்சியில் மக்கள்..!!

0

ஸ்வீடனில் பேருத்துக்கு பணம் இல்லை என பிச்சை எடுத்த நபரிடம் கத்தை கத்தையாக 500,000 பவுண்ட்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்வீடனின் உப்சாலா பகுதியில் 55 வயது முதியவர் ஒருவர் பேருந்துக்கு பணம் இல்லை எனக் கூறி பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அவருக்கு பணம் தராத சிலரை அவர் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் வந்து விசாரித்ததில் அவரிடம் கத்தை கத்தையாக 500,000 பவுண்ட்ஸ் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிசார், சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனை செய்தவர் என வழக்கு பதிந்துள்ளனர்.

மொத்தமாக இத்தனை தொகையுடன் ஒருவர் நடமாடுவது குற்றமாகும் என தெரிவித்துள்ள பொலிசார்,குறித்த முதியவர் ஏன் பிச்சை எடுத்தார் என இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தமது குடியிருப்பை மீட்கும் பொருட்டே தாம் நிதி சேகரித்து வருவதாகவும் எவ்வித முறைகேட்டிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிச்சை எடுத்தே அவர் இத்தனை தொகையையும் சேகரித்தாரா அல்லது வேறு தொழில் ஏதும் செய்துள்ளாரா என்பது குறித்து அவரிடம் விசாரிக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்புமிக்க பணத்தாள் 1,000 குரோனா தாள்களே. ஆனால் குறித்த முதியவரிடம் இருந்து 6,000 தாள்களை பொலிசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*