;
Athirady Tamil News

இவ்வாரத்திற்குள் அமைச்சரவையில் மாற்றம் – ராஜித தகவல்…!!

0

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இந்த வாரத்திற்குள் மாற்றமடையும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சரவையை மறுசீமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட ராஜித, அரசாங்கத்தை மேம்படுத்தும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன்போது பிரதமரின் பதவியையும் மாற்றுமாறு பலர் அழுத்தம் கொடுத்து வருகின்ற போதும், அரசாங்கத்திற்குள் எவ்வாறான முரண்பாடுகளும் இல்லையென இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ராஜித குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, நிதியமைச்சு உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படப்போவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, ஏற்கனவே அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்கள் சிலரின் பதவிகள் நீக்கப்படவுள்ளதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*