;
Athirady Tamil News

பொருளாதார திட்டத்துக்காகவே, இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்டது எனக்கூறிய சிவசக்தி ஆனந்தன்.. (வீடியோ)

0


பொருளாதார திட்டத்துக்காகவே இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்ட்து எனக்கூறிய சிவசக்தி ஆனந்தன்.. (வீடியோ)

இன்றையதினம் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2கோடி ரூபா பெற்றுக்கொண்ட விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வழிகாட்டலில், இன்றையதினம் பாராளுமன்றில், பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உரையாற்றிய போது “உள்ளுராட்ச்சி தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களினால், வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா இலஞசம் வழங்கப்பட்டதாக “பொய் பிரசாரம்” மேற்கொள்ளப்பட்டதாக சிறப்புரிமை தீர்மானத்தின் கீழ் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது இடையிட்டு இதனை மறுத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் “வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும்படி” எதிர்க்கட்சி தலைவரினால் (சம்பந்தரால்) கோரப்பட்டதாகவும், தாம் மறுத்து விட்டதாகவும், இதனால் “வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும்படி” பொருளாதார அமைச்சினால் இரண்டு கோடி ரூபா வழங்கப் பட்டதாகவும், “இப்பணம் பொருளாதார அபிவிருத்தி திட்டத்துக்காக” வழங்கப்பட்ட்து எனவும் தெரிவித்து உள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா பெற்றுக்கொண்ட விவகாரத்தால் பரபரப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா பெற்றுக்கொண்ட விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது

Gepostet von Newsfirst.lk tamil am Mittwoch, 21. Februar 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 20 =

*