;
Athirady Tamil News

நுண்கடன் திட்டத்தை எதிா்த்து யாழில் மாபெரும் கண்டன பேரணி…!!

0

கிராமிய உழைப்பை சுரண்டும் கொடிய வட்டி கடன்திட்டங்களை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இருந்து ஆரம்பித்து யாழ் மாவட்டச்செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களில் கிராமிய மக்கள் சிக்குண்டு அனுபவிக்கும் துன்பங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மேற்படி பேரணி இடம்பெறவுள்ளதாகவும் இப் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 3 =

*