;
Athirady Tamil News

பதின்னான்கு வயது சிறுவனை தாக்கிய பொலிஸாருக்கு நோ்ந்த கதி…!!

0

பதின்னான்கு வயதுடைய சிறுவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவா் சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நேற்றையதினம் (22-02-2018) குறித்த சிறுவன் மேலும் இரண்டு நண்பர்களுடன் மூங்கில் மரக்கன்று ஒன்றை வெட்டச் சென்ற போது இந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டாா்.

இதனால் சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்த நிலையில் பொலிஸாா் உரிய அதிகாரியை கைதுசெய்துள்ளனா்.

சிலாபம் ஜேம்ஸ் வீதியில் வசிக்கும் ஒசாரா ஹர்சமால் என்ற 14 வயதுடைய சிறுவனே ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டு தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இது தொடா்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 17 =

*