;
Athirady Tamil News

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்;பெற்றோலிய ஊழியர்கள்..!!

0

ஸ்ரீலங்கா முழுவதிலும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக மற்றும் களஞ்சியப் பிரிவு ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்தது.

கடந்த 3 வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய பதிலை வழங்கத் தவறிவருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலைத்தருமாறு வலியுறுத்தியே கடந்த வருடமும் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச் சேவைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்ட அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் மக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும். வெகுவிரைவில் கோரிக்கைக்கு பதிலளிப்பதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டதை அடுத்து திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 5 =

*