;
Athirady Tamil News

குளத்தினுள் பாய்ந்து நீச்சலடித்த முச்சக்கரவண்டி; வவுனியாவில் நடந்த சம்பவம்…!!

0

இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் வைரவப்புளிங்குளம் பகுதியிலுள்ள குளத்திற்குள் முச்சக்கர வண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வைரவப்புளிங்குளம் நோக்கி குளக்கட்டு வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விபத்துக்குள்ளானது.

இதன்போது வைரவப்புளிங்குளம் பகுதியில் இருந்து பண்டாரிகுளம் நோக்கி அவ் வீதி வழியாக வந்த முச்சக்கர வண்டி குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக படாதபாடு பட்டுள்ளது. இந்த நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் முச்சக்கர வண்டியில் இருந்து கரணமடித்துக் குதித்து ஓடியுள்ளார்.

அவர் குதித்தபோது குறித்த முச்சக்கர வண்டி குளப்பக்கமாகத் தள்ளப்பட்டது. இதனால் குறித்த முச்சக்கர வண்டி குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*