;
Athirady Tamil News

தேயிலையில் கலவையா …… வைரலாகும் செய்தி..!!

0

தேயிலைக்கு சீனி கலவை செய்யப்பட்டமை தொடர்பில் 82 தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலை சபை வழமைபோன்ற மேற்கொண்டு வருகின்ற பரிசோதனையின் போது இரத்தினபுரியில் 2 தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலையில் சினி கலவை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும்,குறித்த இரு தேயிலை தொழிற்சாலையின் உற்பத்திகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வரும் தேயிலையில் சீனி கலவை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்படுமானால் அதன் உற்பத்தியையும் விற்பனையையும் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + twenty =

*