;
Athirady Tamil News

முறிப்புக் குளத்தில் ஆணின் சடலம்…!! (படங்கள்)

0

கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரின் சடலம் கிளிநொச்சி முறிப்பு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளிக்கிட்ட இவ் இளைஞனே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணைப்பு….

இவர் கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என அடையாம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி உரிமையாளரான இவர் நேற்று (21.02.18) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே காணாமல் போனதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் இன்று(22) புதுமுறிப்புக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 12 =

*