;
Athirady Tamil News

குழந்தையின் மூக்கை பிடித்து பால் கொடுக்கும் பெண்: அதிர்ச்சியில் உறைந்த தாய்..!! (வீடியோ)

0

குழந்தை தொடர்ந்து அழுததால் பெண் ஒருவர் அந்த குழந்தையின் மூக்கை பிடித்து பால் கொடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Nefteyugank பகுதியைச் சேர்ந்தவர் Elena Levendeeva. வேலை செய்து வரும் இவர் தன் குழந்தையை பார்த்து கொள்வதற்காக Anastasia Zhelyabova என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்.

நம் குழந்தையை நன்றாக பார்த்து கொள்கிறாரா என்பதைப் பற்றி அறிய Elena Levendeeva வீட்டில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளார்.

அந்த ரகசிய கேமராவில் அந்த பெண்ணின் நடவடிக்கையை பார்த்த அவர் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது.

அதற்காக பணியில் அமர்த்தப்பட்ட பெண் பாட்டிலில் அடைக்கப்பட்ட பால் கொடுக்கிறார். ஆனால் குழந்தையோ தொடர்ந்து அழுததால், ஆத்திரமடைந்த அவர் உடனடியாக குழந்தையை தூக்கி வீசுகிறார்.

அதன் பின் மீண்டும் குழந்தைக்கு பால் கொடுக்க முற்பட்ட போது அழுததால், குழந்தையின் மூக்கை பிடித்து பால் கொடுக்கிறார்.இப்படி கொடுப்பதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து, இது குறித்து Elena காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இது ஒரு கிரிமினல், குழந்தை என்று கூட பாராமல் தொடர்ந்து அடித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம், விசாரணைக்கு பின் அவர் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − seven =

*