;
Athirady Tamil News

கர்ப்பம் கலைத்ததால் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நடந்தது என்ன?..!!

0

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கருக்கலைப்பு செய்து கொண்டதால் 30 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டிருந்த பெண் தண்டனை காலத்திற்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார்.எல் சால்வடோர் நாட்டில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கருக்கலைப்புக்கு எதிரான கடும் நடவடிக்கைகளால் தற்போது எல் சால்வடோர் சிறையில் 27 பெண்கள் தண்டனை அனுபவித்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உரிய காலத்துக்கு முன்னர் இறந்து பிறந்த குழந்தையால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட Teodora del Carmen Vasquez என்ற பெண்மணியை நீண்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.

சம்பவத்தன்று ரத்தவெள்ளத்தில் கிடந்த தியோடோராவை கடந்த 2007 ஆம் ஆண்டு பொலிசார் கைது செய்தனர்.

இடைப்பட்ட இந்த 10 ஆண்டு காலத்தில் குடும்பத்தினருடன் எந்த தொடர்புக்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை எனவும், கடிதப்போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டிருந்ததாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி அவர் மீதான நன்மதிப்பை மீட்டெடுப்பதற்கும், சிறை தண்டனைபெற்ற காலத்திற்கான இழப்பீடை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் 27 பெண்களில், கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு இரையான 19 வயது இளம்பெண்ணும் ஒருவர் என கூறப்படுகிறது.

30 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமுற்ற இவருக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

இதனால் கைது செய்யப்பட்ட இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 3 =

*