;
Athirady Tamil News

தாயாரால் உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை: மருத்துவமனையில் நடந்த விபரீதம்..!!

0

அயர்லாந்தில் 3 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கி உயிரிழப்புக்கு காரணமான தாயார் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

அயர்லாந்தின் Shankill பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை ஜோ கேனான் என்ற 3 வயது குழந்தையானது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் Crumlin-ல் உள்ள சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

அப்போது முதல் குறித்த குழந்தையானது உயிர் காக்கும் கருவிகள் துணையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளது.இந்த நிலையில் குழந்தை மருத்துவ ரீதியிலான கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இதனிடையே கடந்த புதன் அன்று குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை உயிரிழந்ததாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஜோ கேனனின் 42 வயது தாயார் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fifteen =

*