;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறிய நபர்: மனைவி செய்தது என்ன?..!!

0

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணாக மாறி மறுபடியும் ஆணாக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் James Cohen, இவரது மனைவி Eirian, இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஒருநாள் மனைவியை அழைத்த James Cohen, ஒரு அதிர்ச்சியளிக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதாவது, தான் ஒரு பெண்ணாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார், தனக்குள் எப்போதுமே பெண்ணாக வாழ விருப்பம் இருந்ததாகவும், இனியும் ஆணாக வாழ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரிடம் அதிக பிரியம் கொண்ட Eirian, கனவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்ல அவருக்கு ஹார்மோன் சிகிச்சைக்கும் உதவினார்.

James Cohen, Kara என்னும் பெண்ணாக மாறினார். இதெல்லாம் நடந்தது கடந்த வருடம் ஜனவரியில். கணவன் பெண்ணாக மாறிவிட்டாலும் Eirian, Kara நட்பு தொடர்ந்தது.

இது நடந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில் ஒருநாள் Karaவிடமிருந்து Eirianக்கு ஒரு அழைப்பு வந்தது.

பெண்ணாக வாழ்ந்து போரடித்து விட்டது என்றும், மீண்டும் ஆணாக மாற விரும்புவதாகவும் தெரிவித்தார் Kara, இம்முறையும் மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவித்தார் Eirian.

மீண்டும் தாடி வளர்த்துக் கொண்டு ஆண் போல உடையணிந்து கொண்டு ஆணாக மாறி விட்டார் Kara, இப்போது அவர் பெயர் Jim.

Jim இப்போது தனது பிள்ளைகள் மற்றும் முன்னாள் மனைவியின் வீட்டிலேயே வசிக்கிறார்.

ஒரே விடயம் Eirianக்கு இப்போது ஒரு ஆண் நண்பர் இருக்கிறார், எல்லோரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + seven =

*