;
Athirady Tamil News

யாழ் செம்மணியில் விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டது இந்துக்கோயில்…!!

0

யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் இந்துக் கோவில் விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏ9 வீதி, செம்மணி சந்திக்கு அருகில் அமைந்துள்ள இந்துக் கோவில் இன்று(23-02-2018) காலை விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இந்துக்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தொடர்ச்சியான முறையில் அழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலங்களாக மன்னாரில் சைவசமயத்தவரின் புனிதமான வழிபாட்டு சின்னங்கள், சேதப்படுத்தப்பட்டதுடன், களவாடப்பட்டது.

இந்த நிலையில் சைவசமய தெய்வ விக்கிரகங்கள் சேதப்படுத்தல் களவாடப்படுதல் போன்ற செயல்களை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை முதல் உதவிச் சங்கம் மற்றும் இந்து சமயத் தொண்டர் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*