;
Athirady Tamil News

அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள்…!!

0

நாட்டின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஜப்பான் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாம் கட்டமான குருநாகல் பொதுஹர நகரில் இருந்து ரம்புக்கன ஊடாக, கலகெதர வரையான 32 கிலோ மீற்றர் நீளமான வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்காக 100 பில்லியன் யென் நிதியை வழங்க ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ மிற்சுபிஷி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இந்த வீதி நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை, ஜப்பானின் தாய்ஸி கோப்பிரேசன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − nine =

*