;
Athirady Tamil News

பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராகிய மஹிந்த ராஜபக்ச…!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு விருப்பமில்லாத நிலையே இன்றும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணியினரில் ஐவர் ஐந்து அமைச்சுப் பதவிகளைப் பெறவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுத்தால் மட்டுமே ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்பதாகவும் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் கூறப்பட்டதாக உதய கம்மன்பில கூறினார்.

எனினும் இதனை ஜனாதிபதி நிராகரித்தபடியினால் தாங்களும் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + nine =

*