;
Athirady Tamil News

விதவை பெண்ணை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்..!!

0

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் வான்மதி (வயது 34). இவருக்கு, கடந்த 2011-ம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு ஆண்டிலேயே முனீஸ்வரன் புற்று நோயால் பாதித்து உயிரிழந்தார். வாழ்க்கையை தொடங்கிய நேரத்திலேயே, கணவரை இழந்து வான்மதி தாலியை பறிகொடுத்தார்.

பிறகு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அதில், திருவண்ணாமலை நேதாஜி நகரை சேர்ந்த 21 வயதுடைய சந்துரு என்ற வாலிபரும் பணி புரிந்தார். இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, வாழ்க்கையில் நடந்த சோகமான சுக, துக்கங்களை சந்துருவிடம் வான்மதி கூறினார். இதனை கேட்ட சந்துரு, வான்மதிக்கு ஆறுதல் கூறி அவரை பயன் படுத்திக் கொள்ள திட்டம் போட்டார். தன்னை விடவும் 13 வயது மூத்தவரான வான்மதியை காதலிப்பதாக கூறி தனது வலையில் விழ வைத்தார்.

மூச்சு இருக்கும் வரை உன்னை கைவிட மாட்டேன். பெற்றோர் எதிர்த்தாலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை காட்டினார். வயது குறைந்த வாலிபரை காதலிக்கிறோம். இது திருமணத்திற்கு சாத்தியமா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் வான் மதியும், தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கையில் சந்துருவின் ஆசைக்கு எல்லாம் இணங்கி உள்ளார்.

வான்மதி வெகுளியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்துரு, வேலையில் இருந்து அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சந்துருவின் காதல் லீலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. நடப்பது நாடகம் என்று தெரியாமல் வான்மதி அதிகம் இடம் கொடுத்துவிட்டார். இந்த நிலையில், ஓராண்டு முன்பு சந்துரு வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு வான்மதியிடம் சொல்லிக் கொள்ளாமல் திருவண்ணா மலைக்கு வந்துவிட்டார். சந்துருவுக்கு போன் செய்த வான்மதி என்னை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, சந்துரு உன்னுடன் பழகியது உல்லாசம் அனுப்பவிக்க தான். திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வான்மதி, முதல் கணவரும் இறந்து விட்டார். 13 வயது குறைவான காதலனும் நட்டாற்றில் விட்டதை நினைத்து கதறி அழுதார். மீண்டும் மீண்டும் சந்துருவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள் என்று கெஞ்சினார்.

சந்துரு திருமணத்திற்கு தொடர்ந்து மறுத்ததால், திருவண்ணாமலைக்கு வந்த வான்மதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். காதலன் சந்துருவை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரினார். போலீசார், சந்துரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘வல்லவன்’ படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பார். தன்னை விட நயன்தாரா 3 வயது அதிகமானவர் என்றாலும் அவர் மீதான மோகத்தில் மாணவர் என்பதை மறைத்து சிம்பு காதல் வலையில் நயன்தாராவை விழ வைப்பார்.

அந்த படத்தில் இருவரும் நெருக்கமாக வரும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். அதன்பிறகே, சிம்பு தன்னை விட 3 வயது சிறியவர் என நயன்தாராவுக்கு தெரிய வரும். அவர் கோபப்படுவார். பிறகு கதையின் முடிவில் இருவரும் இணைவர். அந்த படத்தில் சிம்பு நடித்த ஸ்டைலிலேயே சந்துருவும், வான்மதியின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார் என்பது வேதனைக்குரிய வி‌ஷயம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 6 =

*