;
Athirady Tamil News

நீரியல் வள அதிகாரிகள் மீது தாக்குதல்…!!

0

பதவிய ஆற்றில் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோரை சுற்றவளைக்க சென்ற நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த அதிகாரியொருவர் பதவிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதவிய காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*