;
Athirady Tamil News

வேட்பாளர் யாராக இருந்தால் என்ன, மோடியும் தாமரையும் தான் முக்கியம் – அமித்ஷா..!!

0

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவும் தீவிர முயற்ச்சி எடுத்து வருகின்றன. பா.ஜ.க சார்பில் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜ.க தேசியதலைவர் அமித்ஷா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றார். பந்த்வால் பகுதியில் இன்று நடந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது, “தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை கண்டு கொள்ள வேண்டாம். கட்சியின் சின்னமான தாமரையையும், மோடியின் புகைப்படமும் போதும். சட்டசபை தொகுதி உங்களது இலக்கு அல்ல. ஒவ்வொரு பூத்தும் நமது இலக்கு” என பேசினார்.

மேலும், “ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் நாம் முழுமையான வெற்றி பெறலாம். 4 கோடி வாக்களர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும்” எனவும் அமித்ஷா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 17 =

*