;
Athirady Tamil News

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை…!!

0

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை உள்ளடக்கி, சர்வதேச அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டில் பௌத்த தேசியவாதத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ள அதேவேளை, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் தெற்கே ரோஹிங்கியா அகதிகளின் வீடுகள் கடும்போக்கு பௌத்த பிக்குகளால் தாக்கப்பட்டதுடன், நவம்பவர் மாதம் தெற்கு நகரான காலியில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தாக்கப்பட்டமையும் அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தெற்காசிய அரசாங்கங்கள் தவறியுள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபையினால் வெளியிடப்பட்ட 2017-2018ஆம் ஆண்டிற்கான உலக மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 16 =

*