;
Athirady Tamil News

180 நாடுகளில் ஊழலில் இந்தியாவுக்கு 81-வது இடம்..!!

0

உலக நாடுகளில் எவை ஊழல் மலிந்த நாடுகள், எவை ஊழல் இல்லாத நாடுகள் என அறிந்துகொள்ள வசதியாக கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் ஜெர்மனியை சேர்ந்த ‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு பட்டியல் போட்டு உள்ளது.

இதற்காக அரசு துறைகளில் ஊழல் எப்படி உள்ளது என்று வல்லுனர்கள், தொழில் அதிபர்கள் என பல தரப்பினரிடமும் பேட்டி கண்டு இருக்கிறது.

180 நாடுகள் இந்த ஆய்வில் இடம் பெற்று உள்ளன. அவற்றில் மூன்றில் இரு பங்கு நாடுகள் ஊழல் மலிவான நாடுகள்.

ஊழல் மிக மிக குறைவாக உள்ள நாடு என்றால் அது நியூசிலாந்துதான். அந்த வகையில் நியூசிலாந்துதான் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

ஊழல் மிக மிக அதிகமான நாடுகளில் சோமாலியாவுக்கு முதல் இடம்.

இந்தியாவுக்கு 81-வது இடம் கிடைத்து உள்ளது. சீனா 77-வது இடத்தில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*