நுவரெலியாவில் ஒருவரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..!!

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அக்கல பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா பிரதசத்திற்கான விசேட அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு பத்து மணி அளவில் குறித்த சந்தேக நபர் நுவரெலியா விசேட அதிரடி படையினரால் கைது செய்யபட்டதாக தெரிவித்த அதிரடிப்படையினர் தமக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்ததாக குறிப்பிட்டனர். அவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அக்கல பிரேதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் குறித்த நபர் அக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு இன்றய தினம் இந்த சந்தேக நபர் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னலையில் முன்னிலைபடுத்த உள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.