;
Athirady Tamil News

அரிசி இறக்குமதி இலங்கைக்கு தேவையில்லை; சதொச தலைவர் தெரிவிப்பு…!!

0

இலங்கைக்குத் தேவையான போதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதொச மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.

இதன்படி, பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்கு போதுமானளவு கிடைப்பதாகவும் இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் போதுமானளவு காணப்படுவதாகவும் இதனால் புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றும் சதொச நிறுவனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போகப் பயிர்ச்செய்கையில் ஆறு லட்சம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*