;
Athirady Tamil News

அறையில் தனிமையிலிருந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

0

இலங்கையில் வெளி நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டம் ஹபராதுவ, சுற்றுலா ஹோட்டலில் குறித்த வெளி நாட்டுப் பெண் தங்கியிருந்தபோதே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சுற்றுலா விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சுற்றுலா விடுதி அறையில் தனிமையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரி நேற்று அதிகாலை உள் நுளைந்து துஸ்பிரயோகப்படுத்தியதாக பொலிஸ் வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 39 வயதானவஎ என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைவாகவே சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 10 =

*