;
Athirady Tamil News

வவுனியாவில் தேன் என்று சீனிப்பாணியை விற்றவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்…!!

0

வவுனியா நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் சீனிப்பாணியை காய்ச்சி பல இடங்களுக்குச் சென்று தேன் என்று தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி வியாபாரம் மேற்கொண்ட இருவர் ஓமந்தை பனிக்கநீராவி பகுதியில் சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் சுகாதாரப்பரிசோதகர் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் பனிக்கநீரவிப் பகுதியில் 27 போத்தல்களுடன் தேன் வியாபாரம் மேற்கொண்ட இருவரை பிடித்து சந்தேகத்தில் தேனை பரிசோதனை மேற்கொண்டபோது அது சீனிப்பாணி என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களை விசாரணைக்குட்படுத்தியபோது நெளுக்குளம், ஊர்மிலாகோட்டம் பகுதியிலிருந்து எடுத்து வந்து பல இடங்களில் இவ்வாறு விற்பனை செய்து வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் கைப்பற்றப்பட்ட 27போத்தல் தேன்களுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டபோது அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரப்பரிசோதகர் கே. சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + two =

*