;
Athirady Tamil News

அமெரிக்க சர்வதேச கற்பித்தல் சிறப்பு சாதனை பயிற்சிப்பட்டறையில் செல்வி.பிரபாஜினி…!!

0

அமெரிக்காவின் சர்வதேச கற்பித்தல் சிறப்பு சாதனை பயிற்சிப்பட்டறையில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒகியோ பௌலிங் கிறீன் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சி பட்டறை கடந்த ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஆசிரியை செல்வி சாமித்தம்பி பிரபாஜினி என்ற ஆசிரியரே இதில் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியாக இவர் கலந்துகொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் காரைதீவை பிறப்பிடமாகக்கொண்டவராவார்.

கல்வியில் பால்நிலை சமத்துவம் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு கலப்பு கலாச்சாரம் என்ற தொனிப்பொருளில் இந்த பயிற்சிப்பட்டறை நடைபெறுகின்றது.

21 நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*