;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிப்பு…!!

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்.

இந்தப் பட்டியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்களையும் உப தலைவர்களையும் அறிவிக்கலாம்.

அடுத்த மாதம் நான்காம் அல்லது ஐந்தாம் திகதி இந்த நடவடிக்கை இடம்பெறுவது அவசியமாகும்.

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் 364 உறுப்பினர்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தேர்தலில் 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 7 =

*