;
Athirady Tamil News

கொழும்பில் பட்டப்பகலில் வெடித்தது துப்பாக்கி; ஒருவர் பலி…!!

0

கொழும்பு – வத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தை அடுத்து பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் பிரபல தலைவராக கருதப்படும் தடல்லகே மஞ்ஜு என்ற நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரை குறிவைத்து விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் பாதாள உலகக் குழுவினரது செயற்பாடுகளை தடுப்பதற்காக விசேட அதிரடிப் படையினரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seventeen =

*