;
Athirady Tamil News

மஹிந்தவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மைத்திரி…!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் நிரூபிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்ற நிலையிலும், அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த தொலைபேசி கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கிறது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி இரு தலைவர்களும் கலந்துரையாடியிருப்பதாக அறியமுடிகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் தனியாட்சியை அமைக்குமாறு ஏற்கனவே ஜனாதிபதியிடம் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதோடு சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*