;
Athirady Tamil News

திருகோணமலையில் டச்சுக்கால பீரங்கி கண்டெடுப்பு….!!

0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று(23-02-2018) காலை கட்டுமானப்பணிகளுக்காக அத்திவாரத்திற்கான குழி ஒன்றினைத் தோண்டும்போது மற்றுமொரு பழமையான பீரங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பீரங்கியானது டச்சுக் காலத்திற்குரியது எனவும் சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். 8 டொன் எடையும் 11 அடி நீளமுடைய குறித்த பீரங்கியானது சீனச்சட்டி எனும் பதார்த்தத்தினால் ஆக்கப்பட்டது என தொல்பொருள் திணைக்களாத்தால் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 15ம் திகதி ஒரு பீரங்கியானது கட்டுமானப்பணிகளின்போது வெளிப்பட்டது. அது எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் குறித்த பீரங்கி இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இதற்கு முன்னர் 2003ம் ஆண்டில் தற்போது நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட கட்டத்தின் கட்டுமானப்பணிகளின் போதும் இதுபோன்ற ஒன்று கண்டெடுக்கப்பட்டது என தொல்பொருள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + fifteen =

*