;
Athirady Tamil News

முன்னாள் காதலியைத் தாக்கி தங்கச் சங்கிலியை அபகரித்த விமானப்படை புலனாய்வாளர்…!!

0

தனது முன்னாள் காதலியிடம் தன்னை மீண்டும் காதலிக்கக் கோரி, அவரை கடுமையாகத் தாக்கி அவரது தங்கச் சங்கிலியை அபகரித்த விமானப்படை புலனாய்வு வீரரான காதலனை காவல்த் துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நாரஹேன்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குடிபோதையில் இருந்த காதலனான விமானப் படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தலைமை சிப்பாயை கைது செய்துள்ளதாக நாரஹேன்பிட்டிய காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான யுவதியும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 21 வயதான குறித்த யுவதி நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டு வருகிறார் எனவும் காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த யுவதி வேலை முடித்து நாரஹேன்பிட்டி, ஜயகொத்த ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருக்கும் போதே, குறித்த விமானப்படை வீரர் குடிபோதையில் அங்கு சென்றுள்ளார். அந்த யுவதி முன்னிலையில் சென்ற அவர் தன்னை மீள காதலிக்குமாறு மன்றாடியுள்ளார். இதன்போது யுவதி அதனை வன்மையாக மறுக்கவே கோபமடைந்த விமானப்பப்பிடை வீரர் அந்த யுவதியை அந்த இடத்திலேயே கீழே விழுத்தி கடுமையாக தாக்கியுள்ளார் என காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த நபர் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அபகரித்து விட்டதாக அந்த யுவதி தெரிவித்தார். குறித்த இளைஞனை சோதனை செய்த காவல்த்துறை அவரது கார்சட்டை பைக்குள் இருந்து தங்கச் சங்கிலியை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 7 =

*