மகிந்த ராஜபக்கசவின் தாமரை மொட்டு மலர்ந்தால் தமிழீழம் மலரும் என சம்பந்தன் ஐயா கூறியிருப்பது தவறான விடயம்…!!

மகிந்த ராஜபக்கசவின் தாமரை மொட்டு மலர்ந்தால் தமிழீழம் மலரும் என சம்பந்தன் ஐயா கூறியிருப்பது தவறான விடயம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன்.
தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பானது சமஸ்டி சர்வதேச விசாரணை நீதி என கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றியதாகவே நாங்கள் கருதுகிறோம்,
மகிந்த ராஜபக்கசவின் தாமரை மொட்டு மலர்ந்தால் தமிழீழம் மலரும் என சம்பந்தன் ஐயா கூறியிருப்பது தவறான விடயம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது அபிவிருத்தியை தாண்டி கொள்கைக்க வாக்களியுங்கள் என மக்களுக்கு தெரிவித்திருந்தார்கள். ஆனால் தங்களுடைய கொள்கை என்ன மக்களுக்கு எதை சொல்ல விரும்புகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
பிணை முறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை மற்றும் பிரதமர் ரணிலை காப்பாற்ற பிணை முறி விசாரணையை சுமந்திரன் தடுத்து நிறுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டினார்.
கொள்கைக்கு வாக்களிக்க கூறுபவர்கள் பாராளுமன்றத்தினூடாக தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டு தமிழ் மக்கள் மீது கரிசனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் அபிவிருத்தி என்பது ஒரு படி தாண்டவில்லை ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைகள் வடக்கு கிழக்கில் ஓங்கியிருப்பதுடன் அவர்களின் அபிவிருத்தியும் எல்லை தாண்டியுள்ளது.
எங்களுடைய கொள்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாகவே இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச தமிழ் மக்களையும் ஏமாற்றுகிறார்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் கூட தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
எமது கட்சியால் வடகிழக்கில் இருக்கிற அனைத்து தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவிகள் செய்யப்படும்.
சமஸ்டி வரும்,சர்வதேச விசாரணை வரும், தீர்வு வரும் என தமிழ் தலைமைகள் தெரிவிக்கிறார்கள் அது எப்போது வரும் என தெரிவிக்கிறார்கள் இல்லை.
வடமாகாணத்திற்கு அபிவிருத்திக்கு கொடுக்கப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.
தியத்ததலாவ வெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த விஸ்ணு காந்தன் வடமாகாணத்திலிருந்து புலிகளின் ஆயுதங்கள் கடத்தப்பட்டு தென்னிலங்கையில் விற்கப்பட்டுள்ளது அரசாங்கம் சரியான விசாரணை செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.