;
Athirady Tamil News

வவுனியா விபுலானந்தா கல்லூரி அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று (23) கல்லூரியின் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கத்திற்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வானது கல்லூரியின் புதிய அதிபர் த. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சாரணிய மாணவிகள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளை நடத்தியிருந்ததுடன் சாரணிய ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரியாவிடை பெற்றுச்செல்லும் அதிபர் எஸ். அமிர்தலிங்கத்திற்கு சாரணிய மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் சாரணிய ஆசிரியர்கள் அதிபர் சாரணிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைக்காக பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண உறுப்பினர் ம.தியாகராஜா விபுலானந்தா கல்லூரியின் பாண்டு வாத்திய குழுவினருக்கு இசைக்கருவிகள் வாங்குவதற்காக மாகாணசபையால் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வழங்கியிருந்தார்.

நிகழ்வில் வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் நடராஜா, மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + three =

*